[X] Close

தோட்டத்தில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முருகேசன் - கைதானது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோட்டத்தில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முருகேசன் - கைதானது எப்படி
நாகர்கோவில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் எப்படி கைது செய்தனர்.


Advertisement


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். உடனே இது தொடர்பாக அவரது பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சிறுமி மற்றும் அவரது காதலனை பிடித்தனர். சிறுமியை அழைத்துச் சென்ற காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமியானவள் 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் அவரை காவலர்கள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் ஆஜர் படுத்தினர். அங்கு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சிறுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், இந்தத் தொல்லைகளை நான் கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருவதாகவும், இவையனைத்திற்கும் தனது தாய் உடைந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

image


Advertisement

image 1
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் இந்தத் தகவலை மாவட்ட குழந்தைகள் நலஅலுவலருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அவரது தரப்பில் இருந்து இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நாஞ்சில் முருகேசன் உட்பட 5 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாய், குளத்தூரை சேர்ந்த பாலு, கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் அவரது வாகன ஓட்டுநர் கண்ணன் மற்றும் உதவியாளர் மகேஷ் ஆகியோருடன் தலைமறைவானார். தலைமறைவான நாஞ்சில் முருகேசன் மற்றும் இதர நபர்களை பிடிக்க அவர்களது செல்போன் சிக்னல்களை காவல்துறையினர் கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது மகேஷ் என்பவரை ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

image

image 2
இந்த செல்போன் சிக்னல் மூலம் முருகேசன் உவரியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இன்று பிற்பகல் 1 மணியளவில் நாஞ்சில் முருகேசனை கைது செய்தனர்.
முதலில் பாஜக கட்சியில் இருந்த நாஞ்சில் முருகேசன். ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி நன்கு பணம் சம்பாதித்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.


Advertisement

image

image 3
இதனைதொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். தனக்கு எதிராக போட்டியிட்ட சுரேஷ் என்பவரிடம் தோற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முருகேசனிடம் இருந்து சலுகைகளைப் பெறுவதற்காக தனது மகளை நாஞ்சில் முருகேசனின் பாலியியல் இச்சைக்கு உட்படுத்திருக்கலாம் எனறு கூறப்படுகிறது. முருகேசன் தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement