'சச்சினை ஏன் நாங்கள் தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தோம்’ விராட் கோலி நினைவுகள்..!

Kohli-Reveals-reason-for-Sachin-Tendulkar-Victory-Lap-After-World-Cup

2011 உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. வெற்றி இலக்கை எட்டியதும் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அனைவரும் சீனியர் வீரரான சச்சினை தோளில் சுமந்து கொண்டு மைதானம் முழுவதும் மகிழ்ச்சியோடு வலம் வந்தனர்.    


Advertisement

image

தற்போது சச்சினை தோளில் சுமந்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி.


Advertisement

image

இந்திய அணியின் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலோடு ‘ஓபன் நெட்ஸ் வித் மாயங்க்’ என்ற ஆன்லைன் வீடியோ சேட் மூலமாக அதனை தெரிவித்துள்ளார் அவர்…

image


Advertisement

“இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தேன். என்னை போலவே எல்லா வீரர்களும் மகிழ்சசியோடு காணப்பட்டனர். இருந்தாலும் எல்லோரது கவனமும் சச்சின் மீது தான் மையம் கொண்டிருந்தது. ஏனென்றால் அந்த உலகக் கோப்பை தொடர் தான் கோப்பையை வெல்ல அவருக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. அதற்கு முன்னர் அவர் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். அந்த உந்துதல் தான் அவரை நாங்கள் தோளில் சுமக்க காரணம். இது அவருக்கு ஜுனியரான நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்த கவுரவம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement