"என் மீதான விசாரணையை மும்பைக்கு மாற்றுங்கள்" உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் காதலி மனு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாட்னா காவல்துறையினரால் விசாரிக்கப்படும் என் மீதான வழக்குகளை மும்பைக்கு மாற்றுமாறு மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Advertisement

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

image


Advertisement

இந்நிலையில் ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

image

பாட்னா போலீஸார் அழைப்பின் பேரில் அங்குச் சென்ற ரியாவிடம் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் "பாட்னாவில் நடைபெற்று வரும் விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை மும்பை போலீஸார் மேற்கொண்டு வருவதால் இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement