’ஆக. 15ஐ கருப்பு தினமாக கடைபிடிக்கப் போகிறோம்’ கொடைக்கானல் பழங்குடியின மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் மலை பகுதிகளில் வசிக்கும் பளியர் மற்றும் புலையர் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.


Advertisement

2006 ஆம் ஆண்டு வன உரிமைச்சட்டத்தின் படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பளியர். மற்றும் புலையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 2400பேர் வசித்து வருகின்றனர்.

image


Advertisement

image 1

இவர்கள் விவசாயம் செய்து வரும் வன நிலங்களுக்கு பட்டா கோரி, 2008ஆம் ஆண்டு அரசுக்கு மனுச்செய்திருந்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த அரசு 2018 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தவர்களில் 160 பேருக்கு மட்டும் வன நிலங்கள் கொடுக்கப்பட்டது. அதிலும், வனங்களில் ஒருவிவசாயம் 2 ஏக்கருக்கு மேலான நிலங்களில் விவசாயம் செய்துவந்தால். அந்த நிலங்களுக்கு பதிலாக, 2 செண்ட், 10 செண்ட், 40 செண்ட் என மிகவும் குறைவாக நிலங்களை அளந்து கொடுத்துள்ளதாக பழங்குடியினர் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இன்றளவும் விவசாயம் செய்யமுடியாமல், கூலிவேலைக்கு சென்றுவருவதாக வேதனையுடன் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, அவரவர் கிராமங்களில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை, கருப்பு தினமாக அறிவித்து கடைபிடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Advertisement

image

image 1
சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்கும் போராட்டத்திற்கு பின்னரும் அரசு செவிசாய்க்காவிட்டால் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று, பழங்குடியினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக அரசால் பெற்றுள்ள அடையாள அட்டைகளை கிராம சபையில் திருப்பி ஒப்படைத்துவிட்டு, அடர் வனப்பகுதிக்குள் குடியேறப்போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு அரசு தரப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement