சிறுமிக்கு பாலியல் தொல்லை : முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணமால் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் காதலனுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. அவரை கண்டுபிடித்து போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


Advertisement

image

சிறுமி அளித்த வாக்குமூலத்தில், “அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் ரீதியிலாக தொல்லை கொடுத்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொந்தரவை அனுபவித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement