நூறு வயதைத் தாண்டியும் முறையாக வரி செலுத்தும் 4 பெண்கள் - வியந்து போன ஐ.டி துறை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள 100 வயதை தாண்டிய மூதாட்டிகள் இன்றும் விடாமல் முறையாக வரிசெலுத்தி வருகின்றனர். இதை கருத்தில்கொண்ட வருமான வரித் துறையினர் அவர்களை நேரிலேயே சென்று வாழ்த்த திட்டமிட்டனர்.  அதன்படி அவர்கள் இல்லங்களுக்கே சென்று அவர்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துள்ளனர்.


Advertisement

கிரிஜா பாய் திவாரி - 117 வயது, ஈஸ்வரி பாய் லுல்லா - 103 வயது, காஞ்சன் பாய் - 100 வயது, பீனா ரக்‌ஷித் - 100 வயது ஆகிய நால்வரையும் நேரிலேயே சென்று வாழ்த்தியுள்ளனர்.

image


Advertisement

இதுகுறித்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் முதன்மை வருமான வரி தலைமை ஆணையர் ஏ.கே. சவுஹான் கூறுகையில், மிக பழமையான வரிசெலுத்துவோர் லிஸ்ட்டில் கிரிஜா பாய் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். உலக அளவில் அல்லது இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளாரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இரண்டு மாநிலங்களில் மிகப் பழமையான பான் அட்டை பதிவு உடையவர் இவர் என்றும், நாட்டின் பழமையான வரி செலுத்துவோரில் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார். அசல் ஓய்வூதியக்காரராக இருந்த தனது கணவர் இறந்தபிறகு அவர் சார்பாக கிரிஜா பாய் குடும்ப ஓய்வூதியம் பெறுவதாக சவுஹான் தெரிவித்தார்.

ஜூலை 24ஆம் தேதி கொண்டாடப்பட்ட 160வது வருமான வரி அறக்கட்டளை தினத்தின் ஒரு பகுதியாக இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இன்று பலபேர் முறையாக வரி செலுத்தாமல் இருப்பது குறித்து தினமும் புகார் வந்துகொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே முறையாக வரிசெலுத்தி வரும் இந்த 4 மூதாட்டிகளும் நிச்சயம் ஒரு முன்மாதிரியாக இருப்பார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement