6 சிக்ஸர்களை குறிப்பிடாதீர்கள்.. ஸ்டூவர்ட் பிராட் ஒரு லெஜண்ட்: பாராட்டி தள்ளிய யுவராஜ்சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யுவராஜ்சிங் என்றாலே 6 சிக்ஸர்கள் தான் நினைவுக்கு வரும். 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களுடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.


Advertisement

image

ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் நாலாபுறமும் பறந்தன. 6 சிக்ஸருக்கு முன்னதாக பிளிண்டாப் உடன் வார்த்தைப்போர் நடக்கும். அதற்கு பிறகு 6 சிக்ஸர்கள் பறந்தன. இது குறித்து சமீபத்தில் பேசிய யுவராஜ் சிங், 6 சிக்சர்கள் அடிக்கும் போது நான் செம கோபத்தில் இருந்தேன் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.


Advertisement

image

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் நான் ஸ்டூவர்ட் பிராட்டைப் பற்றி ஏதாவது எழுதும்போது, மக்கள் அவரை ஆறு சிக்ஸர்களுடன்
தொடர்புபடுத்துகிறார்கள்! ஆனால் இன்று எனது ரசிகர்கள் அனைவரையும் இதைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், அவரின்
சாதனையைத் தான் நாம் இன்று பாராட்ட வேண்டும்.

500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது நகைச்சுவையல்ல. இதற்கு பல ஆண்டுகள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு தேவை.
உங்கள் பின்னடைவுகளை நீங்கள் எப்போதுமே எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறீர்கள். என் நண்பரே ஸ்டூவர்ட் பிராட், நீங்கள் ஒரு லெஜண்ட்!
தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த பதிவுக்கு இருநாட்டு ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதை யுவராஜ் மீண்டும் நிரூபித்து விட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement