உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வயல் வெளியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

image
சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதில் குட்டியம்மாவுக்கு சொந்தமான இரண்டு மாடுகளும். மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமான தலா ஒருமாடும் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

image


Advertisement

உயர் மின்னழுத்த கம்பி மிகவும் தாழ்வாக இருப்பதாகவும், மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாகவும் ஏற்கனவே மின்வாரியத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மழையின் காரணமாக மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது என்றனர் மாட்டின் உரிமையாளர்கள். அதனால் மின் வாரியத்திடமிருந்த உரிய இழப்பீடை பெற்று தருமாறு மாட்டின் உரிமையாளர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement