கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் அதிக அளவில் பூத்து குலுங்கும் தமிழகத்தின் மாநில மலர் மற்றும் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்களில் பாடப்பட்டுள்ள செங்காந்தள் மலர்கள்.


Advertisement


தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் மலர்கள் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த மலர்ச்செடியின் கிழங்குகள் உலகமெங்கும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மருத்துவ குணம்நிறைந்த இந்த மலர்கள் தற்பொழுது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொத்துக்கொத்தாக பூத்து குலுங்குகின்றன.

image


Advertisement

image 1

இயற்கையாக மலைப்பகுதிகளில் அதிகம் வளரும் இந்த மலர்ச்செடிகளை, சமவெளிப்பகுதிகளில் அதிகம் வளர்த்து ஏற்றுமதி செய்யப்படுவதை போல, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயிற்சி அளித்து, உற்பத்தியை பெருக்க தோட்டக்கலைத்துறை உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஒருகிலோ செங்காந்தள் மலர் கிழங்குகள் மூவாயிரம் ரூபாய் அளவிற்கு விலை போவதால், இதனை பயிரிட்டு ஏற்றுமதி செய்தால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெருகும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

image


Advertisement

image 2
இந்த செங்காந்தள் மலர்களைப் பற்றி சங்க இலக்கியங்களான நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட நூல்களில் இதன்பெயர் இடம்பெற்றுள்ளது. கபிலரின் குறிஞ்சி பாட்டிலும் இந்த மலரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கிய பாடல்களில் பெண்களின் கை விரல்கள் போல இம்மலரின் இதழ்கள் உள்ளது என பாடப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement