பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 36 விமானங்களும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
முதற்கட்டமாக 2020 மே இறுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடையும். மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஃபேல் வரவுள்ள அம்பாலா பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாலா பகுதியில் வசிப்போர் மொட்டை மாடிக்கு வருவதும் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்பாலா போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் ரஃபேல் விமானம் வரும் நேரத்தில் பொதுமக்கள் மொட்டைமாடிக்கு செல்லக்கூடாது என்றும், விமானத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். அப்படி செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்