தூத்துக்குடி: வழக்கறிஞரை தாக்கிய புகாரில் 5 போலீசார் மீது வழக்குப்பதிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

உடன்குடியை சேர்ந்த மால் முரளி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 11-ம் தேதி லெட்சுமிபுரம் மருதூர் கரையில் மனைவி, குழந்தைகளை பார்க்க பைக்கில் வந்துள்ளார். சித்தன்விளை பகுதியில் வரும்போது பின்னால் காரில் வந்தவர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி எங்கே சென்றுவிட்டு வருகிறீர்கள் என விசாரித்துள்ளனர்.

அப்போது தான் வழக்கறிஞர்  எனவும், மனைவி, குழந்தைகளை பார்க்கச் செல்வதாகவும், வீட்டிற்கு மளிகைச் சாமான்கள் வாங்கி செல்வதாகவும் கூறியுள்ளார். அப்போது அவதூறாக பேசிய போலீசார், மால் முரளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மால் முரளியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


Advertisement

அவரது புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மால் முரளியை தாக்கியது தூத்துக்குடி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் என தெரிய வந்தது. இதையடுத்து புகாரை போலீசார் கிடப்பில் போட்டதாக சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மால் முரளி புகார் அளித்தார். நீதிபதி விசாரணை நடத்தி தனிப்பிரிவு எஸ்.ஐ. ராஜபிரபு உள்ளிட்ட 5 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய  மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.           

loading...

Advertisement

Advertisement

Advertisement