திருப்பத்தூர்: மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.


Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே, ஏராளமான புள்ளிமான்கள், மலைப்பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

image


Advertisement

இந்நிலையில், புள்ளி மான்குட்டி ஒன்றை மாலைப்பாம்பு பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் உடனே திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மானை மலைப்பாம்பிடம் இருந்து மீட்டனர். பின்னர் மானுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது.


Advertisement

image

இதனை அடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டுச் சென்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement