கன்னியாகுமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயும் உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுக்கு, சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி அந்தச் சிறுமியையும் காதலனையும் கண்டுபிடித்தனர்.
 
சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியபோது, அந்தச் சிறுமி சில அதிர்ச்சித் தகவல்களைக் கூறியிருக்கிறார். நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அந்தச் சிறுமி கூறியிருக்கிறார்.
 
image
இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், முருகேசன் தலைமறைவாகி உள்ளார். தனிப்படை அமைக்கப்பட்டு நாஞ்சில் முருகேசனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. முருகேசன் அப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது 15 வயதான அச்சிறுமிக்கு இரண்டு வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்தும் சிறுமியின் தாயார் நாஞ்சில் முருகேசனை கண்டிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
 
இதனால் அந்தச் சிறுமி, தான் காதலிக்கும் இளைஞரிடம் தெரிவித்ததையடுத்து, அந்தச் சிறுமியும் இளைஞரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில்தான் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  
 
நாஞ்சில் முருகேசன் தற்போது அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் முருகேசன் 2011-ல் நாகா்கோவில் சடமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னா் மீண்டும் 2016-இல் அதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
loading...

Advertisement

Advertisement

Advertisement