சென்னையில் பெய்யும் மழை சிலமணி நேரங்களில் நிற்கும் - வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் மழை சில மணி நேரங்களில் நின்று விடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல நள்ளிரவு முதல் உள் மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் மழை சில மணி நேரங்களில் நின்று விடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரையும் இடியுடன் கூடிய மழை, உள் மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement