மழைக் காலங்களில் நோய்களை வரவழைப்பது அசுத்தமான குடிநீரும், சுற்றுச்சூழலும்தான். இப்போது அனைவரும் வந்த நோயைத் தீர்க்க போராடப் பழகி வருவது வழக்கமாயிற்று. பொதுவாகவே மழைக் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் குழந்தைகள்தான். இளம் பிஞ்சுகள் நோய்வாய்ப்பட்டு மீண்டு வருவதற்குள் அவர்களின் ஆரோக்கியம் ஒரு வழியாகிவிடும். குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.\
நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க
சளி
மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் எளிதில் சளி பிடிப்பது இயல்பு.
மழைக் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் சற்று அதிகமாகத் தலைதூக்கும். மலேரியா, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன் குனியா போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அறிகுறிகள் அறிந்து கொள்வது அவசியம்.
மூளை அழற்சி
இது மூளையில் ஏற்படும் ஒரு அழற்சி நோய். வைரஸ் பாக்டீரியா தாக்கப்படுவதே இந்நோய்க்குக் காரணம். இதனால் தலைவலி, உடல் களைப்பு, காய்ச்சல், குழப்பம், சோர்வு ஆகியவையே இதற்கு அறிகுறி.
மலேரியா
கொசுக்களின் மூலம் ஏற்படும் நோய்களில் மலேரியா ஒன்று. இக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகம் பரவும் ஒன்றாக இருக்கிறது. காய்ச்சல், உடல்நடுக்கம், தசைவலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே வீடுகளுக்கு முன்பு திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
டெங்கு காய்ச்சல்
சமீப காலமாகத் தமிழக மக்களை உலுக்கி வரும் நோயாக டெங்கு காய்ச்சல் உள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தடிப்புகள் உடலில் தென்படும். இக்காய்ச்சலும் கொசுக்களால்தான் ஏற்படும்.
காலரா
மழைக்காலத்தில் வரும் கொடிய நோய்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது காலரா. அசுத்தமான குடிநீரை அருந்துவதால் காலரா ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்டால் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படுவதோடு உடல் சோர்வும் ஏற்படும்.
சிக்கன் குனியா
மிகையான காய்ச்சல், மூட்டு வலி, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையும் இதன் அறிகுறிகள். கொசுக்களின் மூலமே இந்நோய் பரவுகிறது.
தற்காப்பு நடவடிக்கைகள்
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?