”சாத்தான்குளம் போலீசார் என்னை நிர்வாணமாக்கி தாக்கினார்கள்” பனை தொழிலாளி பகீர் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரம் மீரான்குளத்தை சேர்ந்தவர் யாக்கோபு ராஜ். பனை தொழில் செய்து வருகிறார். 


Advertisement

image

அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு மனு அளித்தார். 


Advertisement

அதில் அவர் தெரிவித்துள்ளது “நான் கடந்த மே 23 அன்று மாலை ஏழு மணி அளவில மீரான்குளம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், மற்றும் ஐந்து பேர் என்னை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி தாக்கினர். 

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கூறியதன் பேரில் மீண்டும் தாக்கினர். மறுநாள் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். 

ஆனால் என் மீது புகார் கொடுத்தவரோ, அந்த வழக்கில் சாட்சியோ யாரென்றே எனக்கு தெரியாது. ஆகையால் என்னை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் அந்த ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement