விவசாய நிலங்களில் இறந்தவரின் உடல்களை சுமக்கும் கிராம மக்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இடுகாட்டிற்கு முறையான பாதைவசதி இல்லாததால் தனியார் விவசாய நிலங்கள் வழியே எடுத்துச் செல்லப்படும் இறந்தவர்களின் உடல்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் காலம் காலமாக அக்கிராம மக்கள் தனியார் விவசாய நிலங்களுக்கு மத்தியில் சடத்தை கொண்டு சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.


Advertisement

image

image 1
இந்நிலையில் இன்று கொத்தகுப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தனியார் விவசாய நிலம் வழியாக சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளானர். இடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


Advertisement

image

image 2
இது குறித்து குடியாத்தம் வட்டாட்சியர் வச்சலா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது. இன்றைய காலத்தில் இடுகாட்டிற்கு வழி இல்லாமல் நிச்சயம் இருக்காது. மேலும் கொத்தகுப்பம் இடுகாட்டிற்கு வழியில்லை என இதுவரை தனக்கு எந்த புகாரும் வரவில்லை. இருந்தபோதும் இது குறித்து உடனடியாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

loading...
Related Tags : வேலூர்Vellore

Advertisement

Advertisement

Advertisement