கொரோனா பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சில தளர்வுகளோடு ஊரடங்கு தொடர்ந்து வருகிறது.
‘அதனால் மற்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எல்லாம் இரண்டு மாதம் தான் ஊரடங்கு. ஆனால் தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும் இந்த வருடம் முழுவதுமே ஊரடங்கு தான்’ என குமுறுகின்றனர் தெருக்கூத்து கலைஞர்கள்.
இது குறித்து திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளது...
“வழக்கமாக மாசி முதல் ஆவணி வரையிலான ஆறு மாதங்களை நம்பித்தான் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் தான் பெரும்பாலான திருவிழாக்களும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கும். ஆனால் கொரோனா அனைத்தையுமே மாற்றி அமைத்து விட்டது.
அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் தானே இருக்கிறது. இதில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும்தான் பிரச்சனையா என்று நினைக்கலாம். தெருக்கூத்து கலைஞர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருந்தால் மட்டுமே அடுத்த தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெறும். அப்போதுதான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
வீடடங்கிக் கிடக்கும் இந்த நாட்களை நம்பி தான் ஒரு வருடத்தின் வாழ்வாதாரமே இருக்கிறது. ஊர் உலகத்தையே விடிய விடிய மகிழ்வித்த கலைஞர்கள். இன்று, இந்த ஒரு வருடத்தை எப்படி கடக்கப் போகிறோம் என்ற வேதனையில் மூழ்கி இருக்கிறோம். இந்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கலைஞர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அப்படி செய்யாமல் போனால் கலைஞர்களும் அழிந்துபோவார்கள் கலையும் அழிந்துபோகும்” என்றார்.
தெருக்கூத்து கலையை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர் வந்தவாசிக்கு பக்கம் உள்ள புரிசை கிராம மக்கள்.
அந்த கிராமத்தின் தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப சம்பந்தன் தெரிவித்தது
“ஒவ்வொரு முறையும் கூத்து நடத்துவதற்கு முன்னர் ஒத்திகை பார்ப்போம். பெரும்பாலும் அது நிகழ்ச்சி எதுவும் இல்லாத நாட்களில் தான் இருக்கும். காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வருவதற்காக தான் இந்த ஒத்திகை. இப்போது கொரோனாவினால் அந்த ஒத்திகையை கூட நாங்கள் போட்டு பார்ப்பதில்லை. அதே போல ஆண்டு தோறும் கூத்து தொடர்பான பயிற்சி பட்டறையை எங்கள் கிராமத்தில் நடத்துவோம். இப்போது அதுவும் இல்லை. இப்படி எதுவுமே இல்லாத ஆண்டாக தான் இந்த ஆண்டை ஒவ்வொரு கூத்து கலைஞனும் கடக்க வேண்டி உள்ளது” என்றார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்