தூத்துக்குடியில் ஒரே நாளில் ஆயுதப்படை போலீசார் 37 பேருக்கு கொரோனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,896 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,439 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.


Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதப்படை போலீசார் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆயுதப்படை காவலர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.


Advertisement

மேலும் அதே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் காவலருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் போலீசார் மத்தியில் கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது.      

loading...

Advertisement

Advertisement

Advertisement