சென்னையில் தொடர்ச்சியாக பைக் திருட்டு... வசமாக சிக்கிய 3 பேர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனம் மற்றும் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பைக் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பைக் திருட்டு போன இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சோழிங்கநல்லூரை சேர்ந்த ரூபேஷ்(21), நவீன்(21), மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரூபன்ராஜ்(25) ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் திருடிய வாகனங்களை பிரித்து வைத்திருந்த உதிரி பாகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement