சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) வைட்டமின் சி நிறைந்த உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த உணவுகளை தினமும் முறையாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
நெல்லிக்காய்
ஆம்லா அல்லது நெல்லிக்காய் என்று சொல்லப்படுகிற இதில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்திற்கு நன்மை தரக்கூடியது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே தினசரி தேவையான வைட்டமின் சி அளவில் 46 சதவீதத்தைக் கொடுக்கும். நம் உடலில் வளர்சிதை மாற்றம், எலும்பு உருவாதல், இனப்பெருக்கம் போன்றவற்றிற்குத் தேவையான மாங்கனீஸ் என்ற கனிமமும் நெல்லிக்காயில் உள்ளது.
ஆரஞ்சு
ஆரஞ்சு ஒரு சிட்ரிக் பழம். இது பலவித வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 100 கிராம் ஆரஞ்சில் 53.2 மி.கி வைட்டமின் சி உள்ளது. இதுவும் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. உடலில்செல்கல் சேதமடையாமல் பாதுகாக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆரஞ்சின் பங்கு மிக அதிகம்.
பப்பாளி
இனிப்பான அதே சமயம் பல வியாதிகளை குணமாக்கும் மருந்துகளைத் தயாரிக்க பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழம் இது. ஒரு மீடியம் அளவிலான பப்பாளி பழத்தில் தினசரி தேவைக்கான வைட்டமின் சி இரண்டு மடங்கு உள்ளது. பப்பேன் என்னும் செரிமான நொதி இதில் உள்ளது. அழற்சிக்கு எதிராக செயல்படும். மேலும் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவையும் பப்பாளியில் உள்ளது. இவை அனைத்துமே சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்யத்தை மேம்படுத்தும்.
கேப்சிகம்
பெரும்பாலும் ஒதுக்கப்படும் காய்கறிகளில் ஒன்று கேப்சிகம். ஆனால் இதில் வைட்டமின் சி நிறையவே உள்ளது. பொதுவாகவே பச்சை காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்திருக்கும். இது உடலின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு சருமத்தையும் பாதுகாக்கும். கண்கள் ஆரோக்யமாகும்.
கொய்யாப்பழம்
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள மற்றொரு பழம் கொய்யா. தினமும் ஒரு கொய்யாப்பழம் எடுத்துக்கொண்டால் RDI அளவு இரட்டிப்பாக்கும். இதில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதற்கும் அதிகமான அளவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதிலிருக்கும் ஆன்டி மைக்ரோபியல் தன்மை உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் தொற்றுநோயை உருவாக்கும் வைரஸ்களை அழிக்கும் தன்மை கொண்டது.
எலுமிச்சை
வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றி என்றாலே அனைவரும் சொல்வது எலுமிச்சையைத்தான். நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த சிறிய பழத்தில் தயாமின், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி6, பாண்டோதெனிக் அமிலம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?