'நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது'' - கர்ணன் பட போஸ்டர் வெளியீடு!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தினை எடுத்து வருகிறார். தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.


Advertisement

image

இது தனுஷின் 41வது படம். தாணு தயாரிக்கும் கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை சேர்க்கிறார். தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக படப்படிப்பு நடத்தப்பட்டு வந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் இப்படத்தில் போஸ்டர் இன்று வெளியானது. தனுஷுன் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் பல கைகள் ஒன்று சேர்ந்து ஒரு வாளை பிடித்திருப்பது போல உள்ளது.

''நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது - கர்ணன்'' என்ற தலைப்பில் போஸ்டரை இயக்குநர் வெளியிட்டுள்ளார். மேலும் இன்று மாலை 5.55 மணிக்கு ராஜா மேளம் பீட் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கர்ணன் பட போஸ்டருக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

loading...
Related Tags : karnandhanushதனுஷ்கர்ணன்

Advertisement

Advertisement

Advertisement