20 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை திருடியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

20 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை திருடியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பிள்ளையார்பட்டி கண்மாயை, சின்னையா என்பவர் ஏலம் எடுத்திருந்தார். இந்த கண்மாயில் மீன்பிடிக்கும் உரிமை சின்னையாவுக்கு மட்டுமே உள்ளது. அதனால் அவர் கண்மாயை பராமரித்து மீன்களை வளர்த்து வந்துள்ளார்.

image


Advertisement


இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பையா, மதியழகன், பழனி ஆகியயோர் கண்மாயில் வளர்ந்த மீன்களை திருடிவிட்டதாக 3 பேர் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் சின்னையா. மீனை திருடியதற்கெல்லாம் புகாரா என புகாரை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர்.

image

இதனால் மீன்களை திருடிய மூன்று பேர் மீதும், நீதிமன்றத்தில் சின்னையா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அன்னவாசல் போலீசார், சுப்பையா, மதியழகன், பழனி, உள்ளிட்ட மூவரும் சேர்ந்து 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை திருடியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement