டிக் டாக்கில் வீடியோ: 5 பெண்களுக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்

டிக் டாக்கில் வீடியோ: 5 பெண்களுக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்
டிக் டாக்கில் வீடியோ: 5 பெண்களுக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி 5 பெண்களுக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எகிப்தைச் சேர்ந்த ஹனின் கொசாம், மவ்டா-அல்-ஆதாம் உள்ளிட்ட 5 பேர் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் வீடியோ சமூகத்தில் பொது ஒழுக்கத்தை சீர்குலைப்பதாகக் கூறி 5 பேருக்கும் 2 வருட சிறைத் தண்டனை விதித்து தி கைரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் தலா 3 லட்சம் எகிப்தியன் பவுண்ட்ஸ்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் இணைந்து பணியாற்றினால் பணம் சம்பாதிக்கலாம் என்பது போன்ற வீடியோவை ஹனின் கொசாம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார். அதேபோல் ஆதாமும் மில்லியன் கணக்கில் உள்ள தன்னுடைய பாலோவர்ஸ்களிடையே வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

பெண்களின் கைதிற்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறை தான் என்றும், குறிப்பிட்ட மக்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞர் ஒருவர், அதிவேகமாக உயர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பழமைவாத மத சமூகத்துடன் எப்படி மல்யுத்தம் செய்கிறது என்பதற்கு இந்த கைதுகள் எடுத்துக்காட்டு எனத் தெரிவித்துள்ளார்

எகிப்தில் இணைய உலகம் தீவிர கண்காணிப்பில் உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படும் வலைத்தளங்களைத் தடுக்கவும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்வோர் இருந்தாலே அவர்களை கண்காணிக்கவும் திட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com