தொழில் லாபத்தை உயர்த்தும் சிக்கன நுட்பங்கள் : அரசு சார்பில் பயிற்சி..!

Government-entrepreneurship-develop-and-innovation-institutes-MSMEs-six-sigma-training

சிறு, குறு தொழில்களுக்கான லாபத்தை உயர்த்தி தரும் சிக்கன உற்பத்தி நுட்பங்கள் மற்றும் சிக்ஸ் சிக்மா பயிற்சி அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்படவுள்ளது.


Advertisement

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறு, குறு தொழில்களுக்கான லாபத்தை உயர்த்தி தரும் சிக்கன உற்பத்தி நுட்பங்கள் மற்றும் சிக்ஸ் சிக்மா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

image


Advertisement

இதில் செயல் திறன் மற்றும் உற்பத்தி திறன் அதிகப்படுத்தல், தொழிலாளர்கள் திறன் மேம்படுதல், உற்பத்தி செலவினங்கள் குறைத்தல், பொருள் வீணாதல், குறைகள் நீக்கம், சரக்கு இருப்பு, நிதித்தேவை குறைதல், விலையை உயர்த்தாமலே லாபம் அதிகரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் ஆன்லைன் மீட்டிங் மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்புக்கு 94445 56099, 94445 57654 ஆகிய எண்களை அழைக்கலாம் எனப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் இன்று 474 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement