மதுரை அருகே பிரபல ரவுடியை தந்தை மற்றும் மகன் உட்பட மூன்று பேர் இணைந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியாக வசித்துவந்த பிரபல ரவுடி பம்பை தவமணி என்ற இளைஞரை, அவரது எதிர் வீட்டில் வசிக்கும் பூமிநாதன், மகன் விஜய், பூமிநாதனின் தம்பி முருகன் ஆகியோர் இணைந்து சரமாரியாக அரிவாளால் வெடியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் சம்பம் குறித்து உடனடியாக சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ரவுடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பூமிநாதன், விஜய், முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்; மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்தவர் பம்பை தவமணி. இவர் மீது பல்வேறு கொலை, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தந்தை இறந்ததற்கு பிறகு தன் தாயார் தவமணியை விட்டு பிரிந்து தனியாக வசித்துள்ளார்.
இவர் அவ்வப்போது குடித்துவிட்டு அருகில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவரது எதிர் வீட்டில் பூமிநாதன் என்பவபர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்தார். குடிபோதையில் பம்பை தவமணி எதிர் வீட்டில் குடியிருக்கும் பூமிநாதனுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
.வழக்கம் போல் இன்றும் குடிபோதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமுற்ற பூமிநாதன், அவரது மகன் விஜய் மற்றும் பூமிநாதனின் தம்பி முருகன் ஆகியோர் இணைந்து பம்பை தவமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே தவமணி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்