கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் மூன்று மாத கால இடைவெளியை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கிரிக்கெட்டின் தாய் மண்ணான இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
பார்வையாளர்களின் வருகையை இல்லாமல் நடைபெறும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற சூழலில் மூன்றாவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இந்த போட்டியை வெல்லும் அணிக்கே கோப்பை என்பதை உறுதி செய்யும் ‘டிசைடர்’ மேட்ச்.
‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் புகழை நாங்கள் மீட்டெடுப்போம்’ என போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சொல்லியிருந்தார் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர்.
அவர் சொன்னதை போலவே டாஸை வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் நாளின் உணவு இடைவேளைக்குள் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வேகத்தில் வீழ்த்தினர் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள். டாம் சிப்லே, ரூட், ஸ்டோக்ஸ் மாதிரியான பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே நடையை கட்ட போப், பட்லர் மற்றும் பர்ன்ஸ் என மூன்று பேட்ஸ்மேன்களும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.
சுமார் 369 ரன்களை டிரையல் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தது. இங்கிலாந்து பவுலர் பிராட் மட்டுமே ஆறு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து 58 ஓவர்கள் விளையாடி டிக்ளேர் செய்தது. சுமார் 399 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதை விட சமன் செய்யவே வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரம் காட்டும் என சொல்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இங்கிலாந்தில் 399 ரன்களை சேஸ் செய்வது கடினம் என்ற சூழலில் நான்காவது நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது வெஸ்ட் இண்டீஸ். வருண பகவானின் அருள் இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியை சமன் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!