மாஸ்க் சரியாக பயன்படுத்தாவிட்டால் இவ்வளவு ரிஸ்கா? - விழிப்புணர்வு டிப்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான் போல. இன்று யாரைப்பார்த்தாலும் மாஸ்க்கோடுதான் வலம் வருகின்றனர். கொரோனோ தடுப்பு பணிகளில் முதன்மையானது முகக்கவசம்தான். ஆனால் இப்போது முகக்கவசம் குறித்து பல மாற்றுக்கருத்துகளும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.


Advertisement

கூட்டத்தில் செல்லும் போதும், பணியிடத்திற்கு செல்லும் போதும் , புதிய மனிதர்களை சந்திக்கும்போதும் நிச்சயமாக முகக்கவசம் அவசியமானதுதான். ஆனால் இப்போது பலர் தனிமையில் வாக்கிங் போகும்போது, வீடுகளில் இருக்கும்போதுகூட மாஸ்க் அணிவதைப்பார்க்க முடிகிறது. இது அவசியமற்றது என்று தொடர்ந்து மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

image


Advertisement

“பொதுவாக நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் அல்லது சுவாசக்கோளாறு உள்ளவர்கள்  தொடர்ச்சியாக முகக்கவசம்  அணிவதன்  மூலம்  மூச்சு திணறல் பிரச்சினைகள்  ஏற்படலாம். சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது 99 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் நமக்கு கிடைக்கும். முகக்கவசம் அணியும்போது அது 95 சதவீதமாக குறையும்.  நுரையீரல் தொடர்பான நோய்கள் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியும்போது இந்த அளவுக்கு ஆக்சிஜன் கிடைத்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆக்சிஜனின் அளவு மேலும் குறையும். பொதுவாக  92  சதவீதம் அளவுக்கு  குறைவாக ஆக்சிஜன் கிடைக்கும்போதுதான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மேலும் முகக்கவசங்கள் என்ற பெயரில் இப்போது மிக இறுக்கமாக நாசியை அழுத்தும் மாஸ்க்குகள், சுவாசிக்கவே முடியாத வகையிலான முகக்கவசங்கள் என ஆபத்தானவற்றை பலர்  பயன்படுத்துகின்றனர், இதனை தவிர்த்து பாதுகாப்பான மாஸ்க்கினை பயன்படுத்தவேண்டும்” என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

image

அதுபோல முதியவர்கள் நீண்டநேரம் முகக்கவசம் அணியும்போது, அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். எனவேதான் வயதானவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நுரையீரல் மற்றும் சுவாசநோய் பிரச்சினை இருப்பவர்கள் தேவையான இடத்தில் மட்டும் முகக்கவசம் அணியலாம்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement