ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். அவர்கள் எப்போதும் கம்ப்யூட்டர் முன்பு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். இதனால் நாம் உண்ணும் உணவிலிருந்து உடலில் சேரும் கலோரிகள் எரிக்கப்படாமல் வயிறு, தொடை போன்ற பகுதிகளில் அப்படியே தங்கிவிடும். உடல் எடை ஏற ஏற சுறுசுறுப்பு குறையும். உணவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தாலே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கிறார் ஐ5 ஃபிட்னெஸ் ஸ்டூடியோவின் உடற்பயிற்சி வல்லுநர் சரவணன்.
அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
இனிப்புகள்
வீட்டிலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவு சர்க்கரை. வெள்ளைச் சர்க்கரை மட்டும்தான் எடுத்துக்கொள்ளக்கூடாது என நினைப்பார்கள். ஆனால் நாட்டுச் சர்க்கரை கூட உடல் எடையைக் கூட்டும். இனிப்பு உணவுகள் அதாவது ஸ்வீட்ஸை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.
ஜங்க் ஃபுட்ஸ்
ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டால் எடை கூடிவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை தவிர்ப்பதே இல்லை. குறிப்பாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு வெளியே சென்று கலர் கலர் உணவுகளைப் பார்த்ததும் மூளை அதை சாப்பிடவேண்டும் என தூண்டிவிடும். இதனால் நமது உடல் உழைப்பைவிட அதிகமான உணவை வேகவேகமாக சாப்பிட்டு உள்ளே திணித்துவிடுவோம். பிஸ்கட், பஜ்ஜி, சமோசா என எல்லாவற்றையும் வீட்டிலேயே செய்யமுடியும். இப்போது இன்ஸ்டா, ஃபேஸ்புக், யுடியூப் என எங்கு பார்த்தாலும் கலர் கலர் உணவு வீடியோக்கள்தான். அதை பார்த்து ஆசைப்பட்டு நிறையப்பேர் வீட்டிலேயே செய்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இதை தவிர்க்கவேண்டும்.
பால்
பால் கட்டாயம் தவிர்த்திடுங்கள். குடிக்காவிட்டால் கால்சியம் குறைபாடு வருமே என்று யோசிப்பீர்கள். ஆனால் காய்கறிகளை வைத்து அதை ஈடுசெய்யலாம்.
உடற்பயிற்சி
கம்ப்யூட்டரில் வேலைசெய்யும்போது ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கவேண்டாம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறிது நடக்கவேண்டும். பிறகு குனிந்து காலை தொடவேண்டும்.
பிடித்த எந்த பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம். கை, கால்களை உயர்த்தலாம் அல்லது படிகளில் ஏறி இறங்கலாம். இதுவே சிறந்த பயிற்சியாக இருக்கும். இப்படி தினமும் செய்துவந்தாலே எடை ஏறாது. சில மாதங்களில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!