பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள் - வீடியோ!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 29-ம் தேதிக்குள் இந்தியா வரவிருப்பது உலக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
 
ஐந்து ரஃபேல் போர் விமானங்களை கொண்ட முதல் தொகுப்பு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன.
 
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படை விமானிகளே இந்தியாவிற்கு இயக்கி வர இருக்கின்றனர். இதற்காக இவர்கள் பிரான்ஸ் நாட்டில் முழுமையான பயிற்சி பெற்றுள்ளனர்.
 
imageஇந்நிலையில் ரஃபேல் போர் விமானிகளை பிரான்சிற்கான இந்திய தூதர் சந்தித்து உரையாற்றினார். விமானத்தை பாதுகாப்பாக இயக்கி இந்தியாவிற்கு கொண்டு சேர்க்க தனது வாழ்த்துக்களை விமானிகளிடம் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை பிரான்சிற்கான இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் வழியில் ஐக்கிய அமீரகத்தின் விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறக்கப்பட்டு பின்னர் இந்தியா வர இருக்கின்றன. தொழில்நுட்ப பரிசோதனை, விமானிகளை மாற்றம் செய்வது மற்றும் விமானிகளின் ஓய்வு ஆகியவற்றிற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
 
இறுதி தொகுப்பு விமானங்கள், ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வந்து சேரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரஃபேல் விமானம் பறக்கத் தயாரான வீடியோவையும் இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
 
loading...

Advertisement

Advertisement

Advertisement