ஜூலை 29... கே.ஜி.எஃப் 2 படக்குழு வெளியிட்ட அப்டேட் போஸ்டர்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகும் என்று டிவீட் செய்துள்ளார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்.


Advertisement

image

கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. யாஷ் நடித்த கன்னட படமான கேஜிஎஃப் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அத்தனை மொழிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். ”Unveiling the Brutality” என்ற தலைப்பில் ஒரு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூலை 29 என்பது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ள சஞ்சய்தத்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 29 ஆம் தேதியன்று எதுபோன்ற புதிய அப்டேட் வரும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் கேஜிஎஃப் ரசிகர்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement