“வேதனையில் இருந்து மீள அரசு வேலை தந்துள்ளது” - ஜெயராஜின் மூத்த மகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.


Advertisement

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்ஸிஸ்க்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்ஸிஸ்க்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார். அவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி வழங்கபட்டுள்ளது.


Advertisement

Inspector arrested | சாத்தான்குளம் கொடூரம் ...

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெர்ஸி, “தந்தை அண்ணன் கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு  தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதற்கு நீதிமன்றமும் அரசும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். வேதனையில் இருந்து மீள அரசு வேலை தந்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்த மீடியாக்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement