பழம் திருடியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?: உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாதம் வழங்குவதற்காக வைத்திருந்த பழங்களைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இரு சிறுவர்களை கால்களைக் கட்டிப்போட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி இடம்பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.  


Advertisement

பழங்களைத் திருடிய சிறு குற்றத்திற்காக சிறுவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் இரு சிறுவர்களும் கட்டை அவிழ்க்க முயற்சி செய்கின்றனர். அவர்களுடைய கால்களும் கைகளும் கயிற்றால் கட்டுப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.     

இந்தச் சம்பவம் மதுரா மாவட்டத்தில் நசீட்டி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் ஒரு மதச்சடங்கில் நடந்துள்ளதாக ஹிந்தி நாளிதழ் அமர் உஜாலா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement