“கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை” - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை ‘பயமின்மை’ தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


Advertisement

நடிகர் விஷால் தானும், தனது தந்தையும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை வீடியோ மூலம் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “எனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவரை வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன். பின்னர் எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, எனது மேலாளருக்கு கொரோனா பாதிப்பு வந்தது.

நானும், எனது தந்தையும் பயமின்றி இருந்தோம். சித்த, ஹோமியோபதி மருந்துகள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். நான் இதை விளம்பரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன். 4 நாட்களில் எங்கள் காய்ச்சல் குறைந்தது. 7 நாட்களில் நானும், எனது 82 வயது தந்தையும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டோம். மேலாளரும் மீண்டார்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை ‘பயமின்மை’ தான். தைரியத்துடன் இருங்கள். கொரோனாவிலிருந்து மீண்டு வரலாம்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் புதிய அப்டேட்!!

loading...

Advertisement

Advertisement

Advertisement