பழிக்குப் பழியாக முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக்கொலை!

Police-Office-murder-case-two-persons-arrested-in-pudhucerry

பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிக்குப் பழியாக இவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.


Advertisement

புதுச்சேரியை சேர்ந்தவர் கோபிநாத். போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் காரைக்காலில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கோபிநாத் டூவீலரில் காரைக்கால் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த கோபிநாத்தை காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கோபிநாத் உயிரிழந்தார். இது குறித்து காரைக்கால் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் புதுச்சேரியை சேர்ந்த மார்ட்டின், இளந்தமிழன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2014- ம் ஆண்டு புதுச்சேரியில் வேலாயுதம் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கோபிநாத் முக்கிய குற்றவாளி. வேலாயுதத்தின் சகோதரி மகன்கள் ராமு, ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், பழிவாங்கும் விதமாக இந்தக் கொலையை செய்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த 4 அரிவாள்கள், 5 நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement