கொரோனா சோகம்: ஒடிசாவில் காய்கறி விற்கும் பாலிவுட் துணை நடிகர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

பாலிவுட்டில் தயாரிப்பில் உள்ள சூர்யவன்சி படத்தில் நடிகர்  அக்சய்குமாருடன் சேர்ந்து நடித்துவருகிற  கார்த்திகா சாஹோ, ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒடிசாவில் காய்கறி வியாபாரம் செய்து பிழைத்துவருகிறார். கொரோனா காலத்தில் நடந்த ஆயிரம் கண்ணீர்க் கதைகளில் இந்த துயரமும் சேர்ந்துவிட்டது.

கொரானா யாரையும் விடவில்லை. மக்கள் பலரையும் பலவிதமாக பாதித்துள்ளது. அந்தப் பட்டியலில் அண்மையில் சேர்ந்தவர் பாலிவுட் நடிகர் சாஹோ. ஊரடங்கு காரணமாக பாலிவுட் படவுலகமே படப்பிடிப்புகள் இல்லாமல் முற்றிலுமாக முடங்கியது. அதனால் வேலைவாய்ப்புகளை சினிமா தொழிலாளர்கள் இழந்து தவிக்கின்றனர்.  


Advertisement

image

ஒடிசாவின் கெந்த்ரபாதா மாவட்டத்தில் ஹராட்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாஹோ. சினிமா கனவுகளை சுமந்துகொண்டு பாலிவுட் சென்றவருக்கு பாடிகார்டாக நடிக்கும் வாய்ப்புகள்தான் அதிகம் கிடைத்தன. அமிதாப்பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றினார். மறுபக்கம் சினிமாவில் நடிக்க முயற்சிகளும் தொடர்ந்தன.    

 image


Advertisement

2018 ஆம் ஆண்டில்தான் அவருக்கு அதிர்ஷ்டம் கண் திறந்தது. பல படங்களில் கவனிக்கும் அளவுக்கு சண்டைக்காட்சிகளில் நடித்தார். பின்னர் அக்சய்குமாருடன்,  புதிய படமான சூர்யவன்சியில் ஒரு சண்டைக் காட்சியில் சேர்ந்து நடித்துள்ளார். மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவருக்கு வேலையே இல்லை. 

image

தன்னிடம் இருந்த சேமிப்பை வைத்துக்கொண்டு நான்கு மாதம் போராடிப் பார்த்த சாஹோ, சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். பின்னர் அங்குள்ள ரசூல்கட் என்ற இடத்தில் காய்கறி விற்பனையைத் தொடங்கினார். மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கினால் பாலிவுட் செல்வேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சாஹோ.

  

 

loading...

Advertisement

Advertisement

Advertisement