சுஷாந்த் சிங் இறப்புக்குப் பின்னர் பாலிவுட் உலகமே புகார்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலை மையமாக வைத்து நடக்கும் இந்த சதுரங்க ஆட்டத்தில் திறமைமிக்க நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுகிறார்கள் என பாலிவுட் மீதான நெடுங்கால கோபத்தில் கொக்கரித்தார் கங்கனா. இப்படி பலரும் பாலிவுட் மீது குற்றச்சாட்டுகளை அடுக்க, அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் பாலிவுட் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Lost Money comes back, fame comes back, but the wasted prime time of our lives will never come back. Peace! Lets move on. We have greater things to do? https://t.co/7oWnS4ATvB — A.R.Rahman (@arrahman) July 26, 2020
“அது தன்னைப் பற்றி வதந்திகளைப் பரப்ப பாலிவுட்டில் ஒரு கூட்டமே செயல்படுகிறது” என்பது. திறமையின் உச்சமான ஆஸ்கர் நாயகனுக்கே இந்த நிலைமை என்றால், அந்த கறுப்பு பாலிவுட் உலகம் எப்படியானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. அதற்காக பாலிவுட்டில் பிளாக் ஃப்ரைடே, ஜப் வீமெட், கோல்மால் ரிட்டர்ன்ஸ், லவ் ஆஜ் கல் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும், தமிழில் முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமானவருமான நடிகர் நடராஜன் என்ற நட்டியைத் தொடர் கொண்டு பேசினோம்.
அண்மையில் பாலிவுட் குறித்து ஏ. ஆர் ரஹ்மான் கூறிய கருத்துகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அவரது கருத்து திறமை மீதான நம்பகத்தன்மையிலிருந்து விலகி நின்றதாக நான் பார்க்கவில்லை. ஆனால் பாலிவுட்டை பொருத்தவரை திறமைக்கு அங்கு எப்போதும் மதிப்பு உண்டு. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு நடந்த விஷயமானது உண்மையில் தவறானது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. பாலிவுட் உலகத்துக்குதான் இழப்பு. காரணம், கடவுள் இசைத்துறைக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் ஏ.ஆர்.ரஹ்மான். எப்போதுமே கனிந்த மரத்தின் மீதுதானே கல்லடிபடும்.
உண்மையில் பாலிவுட் எப்படியானது?
எனக்கு நேர்ந்த அனுபவத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்படும் போது, அதற்கு முன்னர் எனது முந்தைய படங்களின் வேலையை கணக்கிடுவார்கள். அதன் பின்னர் என்னை அழைத்து கதையைச் சொல்வார்கள். ஒரு நாள் முழுக்க அக்கதை குறித்த விவாதம் நடக்கும். அப்படிதான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு சில நேரங்களில் இயக்குநர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன
பாலிவுட்டின் வாரிசு அரசியல் குறித்த உங்கள் பார்வை?
வாரிசு அரசியல் என்பது எல்லா இடத்திலும் இருக்கக் கூடியது. வாரிசு நடிகருக்கு வாய்ப்பு வேண்டுமானால் எளிதாகக் கிடைக்கலாம். ஆனால் அதன் பின்னர் அவர்களை சினிமாவில் நிலைத்திருக்கச் செய்வது அவர்களின் திறமை மட்டும்தான். பிளாக் ஃப்ரைடே படத்தில் நான் பணியாற்றும் போது நவாசுதீன் இரண்டு மூன்று காட்சிகளில்தான் தோன்றினார். இன்று அவர் எப்படி வளர்ந்திருக்கிறார். அதே போலதான் நான், விஜய் சேதுபதி உட்பட பலரும் ஜெயித்திருக்கிறோம். ஆகையால் பிரச்னைகள் என்பது எல்லா இடத்திலும் இருக்கும். அதனை நாம் நம் திறமையின் வாயிலாக எப்படி கையாள்கிறோம் என்பதே இங்கு முக்கியமான ஒன்று.
பாலிவுட்டில் தென் இந்திய கலைஞர்களுக்கு பெரிதளவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு பாலிவுட்டிற்கு தென்னிந்திய கலைஞர்கள் திறமை மீது இருக்கும் பயம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே? இது எந்த அளவில் உண்மை?
நான் இதனை கலாச்சார சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கிறேன். காரணம் ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கும். அந்தக் கலாச்சாரம் அங்கு இருக்கும் நபர்களுக்கு ஆழமாக ஊன்றி இருக்கும். அந்த ஆழம் தான் அவரவர் இடத்தில் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளான ஆணி வேர்.
முன்பெல்லாம் ஒரு நடிகரை அழைத்து வந்தால், அவருக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்போது அதற்கெல்லாம் நேரம் கிடையாது. அந்த நேரமின்மையே நமது கலைஞர்கள் அதிகமான அங்கு உலா வராததற்கு காரணம். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு காரணம் விதவிதமான ரசனைகள். அதற்கு காரணம் தமிழ் சினிமாதான்.
ஒடிடி தளங்கள் பற்றி?
அது அனைத்து படங்களும் கிடைக்கக்கூடிய தளமாக இருப்பினும், நமது பிடித்த கதாநாயகர்களை தியேட்டரில் பார்த்து கிடைக்கும் அனுபவம் அதில் கிடைக்காது.
லாக் டவுன் எப்படியிருக்கு?
இந்த லாக் டவுண் என்னை வீட்டு வேலைகள் செய்வதில் நிபுணராக மாற்றியிருக்கிறது.
Loading More post
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'