ஓவியாவின் பிக்பாஸ் கேள்விகளால் அவரது ட்விட்டர் பக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதற்கு முன்பு பல தமிழ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினர். சமூக வலைதளங்களில் ஆர்மி தொடங்கப்பட்டு மீம்கள் பறந்தன. இந்நிலையில் அவ்வப்போது ட்விட்டரில் தலைகாட்டும் ஓவியா ரசிகர்களிடம் உரையாற்றுவார். அதன்படி பிக்பாஸ் தொடர்பான கேள்வி மூலம் ட்விட்டரில் பரபரப்பை கிளப்பியுள்ளார் ஓவியா.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் கலவையான பதில்களை அளித்துள்ளனர். தடை செய்வது சரிதான் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிமூலம் பலர் வெளி உலகிற்கு தெரிய வருவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ரசிகர் ஒருவரின் பதிவுக்கு மீண்டும் பதில் அளித்த ஓவியா, டிஆர்பி-க்காக, போட்டியாளர்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு டார்ச்சர் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் பிக்பாஸ் கேள்விகளால் அவரது ட்விட்டர் பக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது
I wish they should not torture contestants until commit suicide for TRP — Oviyaa (@OviyaaSweetz) July 25, 2020
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’