[X] Close

மாந்திரீகம் மூலம் கொரோனாவை விரட்டுவதாக பணம் வசூல் - இருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாந்திரீகம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகின்றன. சில மருந்து ஆய்வுகள் மூன்றாம் கட்ட மனித சோதனையை அடைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தில் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முறையான சோதனைக்கு பின்னரே எந்த ஒரு தடுப்பு மருந்தும் மனிதர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் உலக நாடுகள் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன.

 image


Advertisement

இந்நிலையில் சிறப்பு பூஜை செய்து மாந்திரீகம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் மார்தாண்ட நகரைச் சேர்ந்த இஸ்மாயில் மற்றும் சலீம் ஆகிய இருவர் கொரோனா பாபா என்ற பெயரில் சிறப்பு மந்திரம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்பாக வாட்ஸ்அப் லோக்கல் குரூப்களில் தகவல் பரவ பலரும் அவர்களை சென்று பார்த்துள்ளனர். அவர்களும் இதற்காக ரூ.12ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். இவர்கள் ஏற்கெனவே இதேபோல் காய்ச்சலுக்கும் மந்திர வேலையை செய்துள்ளனர்.

 image

இது கொரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால் சிறப்பு பூஜையை கொரோனா பக்கம் திருப்பி பணம் வசூல் செய்துள்ளனர். அவர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இஸ்மாயில் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் மக்கள் இது போன்ற ஏமாற்றுக்காரர்களை நம்பக் கூடாது என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement