Advertisement

கிருமி நாசினியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீங்க: ஆர்.கே வர்மா வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிருமி நாசினியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என மத்திய பொது சுகாதாரத் சேவை இயக்குனர் ஆர்.கே வர்மா கூறியுள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 12,36,861 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய நடவடிக்கையான கிருமி நாசினி பயன்படுத்துதலை அளவுக்கு அதிகமாக  பயன்படுத்த வேண்டாம் என மத்திய பொது சுகாதாரத சேவை இயக்குனர் ஆர்.கே வர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது “ இந்த காலம் முன்னெப்போதும் நாம் எதிர்கொள்ளாத காலமாக அமைந்துள்ளது. யாரும் இப்படியொரு வைரஸ் உருவாகும் என நினைக்கவில்லை. உங்களை பாதுகாக்க முகக் கவசங்களை அணியுங்கள். சூடான தண்ணீரைக் குடிப்பதோடு, அடிக்கடி கைகளை கழுவுங்கள். அதிகளவு கிருமிநாசினி பயன்படுத்துவதை தவிருங்கள்.” என்று பேசியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement