இப்படியும் ஒரு இசைக்கலைஞர் 2 ஆயிரம் அடி உயரத்தில் டிரம்ஸ் வாசிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 துருக்கியைச் சேர்ந்த இசையமைப்பாளர் அகமது செலிக், ஒரு வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேற்கு துருக்கியில் உள்ள டெக்கிர்டேக் மாகாணத்தில் வானத்தில் பாராகிளைடிங்கில் பறந்துகொண்டு டிரம்ஸ் வாசிக்கிறார்.


Advertisement

அந்த இசைக்கலைஞர் பறந்த உயரம் 2 ஆயிரம் அடி இருக்கும். இப்படி அசாத்தியமான துணிச்சலுடன் வானில் பறந்தபடி டிரம்ஸ் வாசிப்பதன் மூலம் இசைக்கலைஞர் அகமது சமூகவலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். அவரது வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

வானில் பறந்துக் கொண்டே இரு பெரிய டிரம்ஸ்களை வைத்துக்கொண்டு வாசிக்கும் அழகே தனிதான். உள்ளூர் ஊடகங்கள் அவருடைய இசை முயற்சியை "பீட் ஆப் ஏ டிப்ரென்ட் டிரம்" என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.  


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement