கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 7,758 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,51,055 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 66 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்தம் 3,409 பேர் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்