சக அதிகாரியை சுட்டு கொன்று சி.ஆர்.பி.எஃப் போலீஸ் தற்கொலை - டெல்லியில் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் சக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சிஆர்பிஎஃப் போலீஸ் தன்னைத் தானேயும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சார்ந்த ஒரு சப் - இன்ஸ்பெக்டர் தன்னுடன் பணியில் இருந்த மற்றொரு இன்ஸ்பெக்டரை தன்னுடைய போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு(எம்.எச்.ஏ) ஒதுக்கப்பட்ட பங்களாவில் வைத்து இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சி.ஆர்.பி.எஃபை சேர்ந்த இரண்டு போலீஸார் தரையில் ரத்த காயங்களுடன் கிடப்பதையும், இரண்டு பேரும் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.


Advertisement

image

முதற்கட்ட விசாரணையில், இரண்டு போலீஸாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அது தீவிரமடைந்து சப் -இன்ஸ்பெக்டர் கர்னல் சிங் தன்னுடன் சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் தர்ஷத் சிங்கை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்மு- காஷ்மீரில் உள்ள உதம்பூரைச் சேர்ந்தவர் என்றும், இன்ஸ்பெக்டர் ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

பணியில் இருந்தபோது போலீஸ் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொன்றதால் இதுகுறித்து உண்மையான விவரங்களை விசாரித்த பிறகே முடிவு சொல்லப்படும் என சி.ஆர்.பி.எஃபின் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி எம். தினகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement