'எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள்'- கடம்பூர் ராஜூ காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு போர்த்தியவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக் கிருமிகள் என காட்டமாக பேசியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல். கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

 image


Advertisement

சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் அத்தனை பேரையும் மக்கள் அடையாளம் காண வேண்டும். அவர்கள் புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவரை நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

இப்படிப்பட்டவர்களிடம் அரசு மட்டுமல்ல, மக்களும் விழிப்போடு இருந்து கண்டறிந்து அவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்'' என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement