உத்திரமேரூரில் தனது மகள் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக பெற்றோர் கூறி வந்த நிலையில், தந்தையே மகளை கழுத்தை நெரித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி, தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இவர்களுடைய மகள் 23 வயதான செந்தாரகைக்கும், யுவராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. செந்தாரகை திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்னர் தனது தாய்வீட்டுக்கு வந்தார். அங்கு குளியலறைக்கு சென்ற செந்தாரகை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும் கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் அவருடைய பெற்றோர் கூறினர். இதையடுத்து செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய அவரது தந்தை பாலாஜி ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
ஆனால் செந்தாரகை சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செந்தாரகையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செந்தாரகையின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் செந்தாரகை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொலை வழக்காக உத்திரமேரூர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து செந்தாரகையின் கழுத்தை பாலாஜி நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெளியாகியுள்ளது.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'