என்னைப் பற்றி பெரிய கூட்டமே வதந்தி பரப்புகிறது- பாலிவுட் குறித்து பேசிய ஏ.ஆர். ரகுமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரிய கூட்டமே தன்னைப் பற்றி வதந்தி பரப்பி வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.


Advertisement

 தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்து வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பாலிவுட்டில் டில்சே, குரு, ராக்ஸ்டார், டமாசா, ஒகே ஜானு உள்ளிட்ட சில படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். ஆனால் அவர் ஏன் பாலிவுட்டில் அதிக படங்களுக்கு இசை அமைக்கவில்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. அந்த கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார் ரகுமான்.

image


Advertisement

 ரேடியோ நேரலையில் பேசிய ரகுமான், நான் நல்ல படங்களுக்கு நோ சொல்வதே இல்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய கூட்டமே எனக்கு எதிராக வதந்தியை பரப்பி வருகிறது. என்னிடம் இசையமைக்க கேட்டு செல்லவேண்டாமென பலர் கூறியதாக முகேஷ் சாப்ரா என்னிடம் கூறினார். அப்போது தான் நான் ஏன் குறைவான இந்தி படங்களுக்கு இசையமைக்கிறேன் என எனக்கே தெரிந்தது.

image

நல்ல படங்கள் என்னை ஏன் தேடி வரவில்லை என புரிந்தது. ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்கிறது. நான் எதாவது செய்ய வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டம் வேலை செய்கிறது. பரவாயில்லை. எனக்கு விதியின் மேல் நம்பிக்கை உள்ளது. எல்லாம் கடவுளின் செயல் என நம்புகிறேன். நான் அனைவரையுமே வரவேற்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement