“நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவு இது என்பதை முதல்வர் புரிந்து கொள்ளட்டும்”-கனிமொழி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது, கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவுதான், புதுச்சேரியிலும் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு போட்டுள்ளனர் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட சம்பவத்தை தமிழக முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். கண்டிக்கவேண்டிய செயல் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது, கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன்விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement