ஐபிஎல்லில் ஜொலிக்கவில்லை என்றால் தோனிக்கான கதவுகள் மூடப்படும் - வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல்லில் ஜொலிக்கவில்லை என்றால் தோனிக்கான கதவுகள் மூடப்படும் என வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

image


Advertisement

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

image

இந்த ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க மற்றொரு காரணம் தோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி இதுவரை களத்தில் இறங்கவே இல்லை. ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தபோது தான் கொரோனா குறுக்கே வந்தது. அதேவேளையில் இந்த ஐபிஎல் தோனிக்கும் முக்கியமானதாகவே உள்ளது. தோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்வை கணிக்க இந்த ஐபிஎல்லையே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Advertisement

image

இதே கருத்தைத் தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், ரிஷப் பந்த், கே எல் ராகுலை இந்தியா முன்னிலைப்படுத்தலாம். ஆனால் ஐபிஎல்லில் தோனி ஜொலித்தால் அவரைத் தான் முன்னிலைப்படுத்துவார்கள், மாறாக ஐபிஎல் தோனிக்கு கை கொடுக்கவில்லை என்றால் தோனிக்கான கதவுகளை இந்தியா கண்டிப்பாக மூடிவிடும். தோனிக்கு இது ஒரு நல்ல இடைவேளை. அவர் மீண்டும் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement