புதுக்கோட்டை சிறுமி தந்தைக்கு கொலை மிரட்டல் : அரசு நிவாரணத்தை பிடிங்கிய அமைப்பு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு வழங்கிய நிதியை ஒரு அமைப்பு பிடிங்கிக்கொண்டதாக சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியினை ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு, தங்கள் குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என்று உயிரிழந்த சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கேட்டால் தன்னை கொலை செய்து விடுவதாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மிரட்டுவதாகவும், அவர்களுக்கு பயந்து தான் ஊரைவிட்டு ஒளிந்து வாழ்வதாகவும், தனது குடும்பத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சியினர் வழங்கிய நிவாரணத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என சிறுமியின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement

மேலும், தனது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி சிறுமியின் தந்தை நாகூரான் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லாததால், புகார் மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டுச் சென்றார்.

வறுமையில் பூ விற்ற பள்ளிக்குழந்தைகள் : ரூ.1 லட்சத்துக்கும் மேல் நிதிதிரட்டிய திமுக எம்.பி

loading...

Advertisement

Advertisement

Advertisement