முன்னாள் ராணுவ அதிகாரிக்கு உதவிசெய்த மாவட்ட ஆட்சியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சிகிச்சைக்காக பெங்களூர் செல்ல பண வசதி இன்றி தவித்த முன்னாள் ராணுவ வீரருக்கு மாவட்ட ஆட்சியர் வினய் உதவி செய்தார்.


Advertisement

மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். பணி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவருக்கு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்,

image
மருத்துவமனையில் சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்ட நிலையில் மேற்படி மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளானார், இதற்கிடையே அவருக்கு பெங்களுரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் பெங்களூருக்கு வாகனத்தில் செல்லகூட வழியின்றி தவித்துள்ளார்,


Advertisement

image 

மேல் சிகிச்சைக்குச் செல்ல உதவி கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி லட்சுமி மனு அளித்துள்ளார். இதனையடுத்து செல்வராஜை உடனடியாக பெங்களூர் அழைத்து செல்ல ரெட்கிராஸ் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை ரெட்கிராஸ் அமைப்பினர் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து செல்வராஜை மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement